spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'நேசிப்பாயா' படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியீடு!

‘நேசிப்பாயா’ படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியீடு!

-

- Advertisement -

நேசிப்பாயா படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.'நேசிப்பாயா' படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியீடு!

நடிகர் அஜித்தின் பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான விஷ்ணுவரதன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் நேசிப்பாயா. இந்த படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருக்கிறார். மேலும் பிரபு, சரத்குமார், குஷ்பூ, ராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கும் நிலையில் யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருக்கிறார். மேலும் கேமரான் எரிக் பிரிசன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். ரொமான்டிக் காதல் கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு முழுவதும் நிறைவடைந்துள்ளது.

we-r-hiring

அதைத்தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். அடுத்ததாக டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து தொலஞ்ச மனசு எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலை பா விஜய், விக்னேஷ் சிவன், அடேஸ் கிருஷ்ணா ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ