spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாராம்சரண் வீடு தேடி வந்த நெட்பிளிக்ஸ் சிஇஓ... வாரிசு நடிகர்களுடன் கலந்துரையாடல்...

ராம்சரண் வீடு தேடி வந்த நெட்பிளிக்ஸ் சிஇஓ… வாரிசு நடிகர்களுடன் கலந்துரையாடல்…

-

- Advertisement -
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஒரே மகன் ராம் சரண் டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். கடந்த வருடம் வெளியான ஆர் .ஆர். ஆர் திரைப்படத்தின் வழியாக அவர் உலக அளவில் பிரபலமானார். நடிப்பைத் தாண்டி சினிமாவில் பல்வேறு தைரியமான முயற்சிகளுக்காகவும் ராம் சரண் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் அவருக்கு உலக அளவில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

தற்போது ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண் நடித்து வருகிறார். இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். முன்னதாக மாவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் பெற்ற ராம் சரண், இந்த முறை ஒரு சிறப்பான அரசியல் கலந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ராமுக்கு ஜோடியாக கியாரா அத்வாணி நடிக்கிறார். அஞ்சலி, ஜெயராம், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸின் உயர் அதிகாரியான டெட் ஸரண்டோஸை நடிகர் ராம்சரண் சந்தித்துள்ளார். இந்தியா வருகைத் தந்துள்ள டெட் ஐதராபாத்தில் விமானத்தை விட்டு இறங்கியதும் நேராக நடிகர் சீரஞ்சிவி மற்றும் ராம் சரண் குடும்பத்தினரை வீடு தேடி சென்று சந்தித்துள்ளார். அவருடன் சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்கள் அனைவரும் கலந்துரையாடினர்.

MUST READ