spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஸ்டாலினுடன் ஓபிஎஸ் பேசியது என்ன? நடைபயிற்சி சந்திப்பில் நடந்த திருப்பம்! உமாபதி உடைக்கும் ரகசியம்!

ஸ்டாலினுடன் ஓபிஎஸ் பேசியது என்ன? நடைபயிற்சி சந்திப்பில் நடந்த திருப்பம்! உமாபதி உடைக்கும் ரகசியம்!

-

- Advertisement -

ஓபிஎஸ் திமுக கூட்டணிக்கு வரும்பட்சத்தில் திமுக தரப்பில் அவருக்கு 5 இடங்கள் தரப்படலாம். அல்லது விஜயுடன் கூட்டணி அமைத்து திமுகவுக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்க பார்ப்பார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி கூறியுள்ளார்.

we-r-hiring

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், ஓபிஎஸ், பிரேமலதா போன்றவர்கள் சந்தித்து பேசியுள்ள நிலையில், இதன் பின்னணி அரசியல் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:-  எடப்பாடி பழனிசாமியை பாஜக நம்ப தயாராக இல்லை. அதனால் எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு செங்கோட்டையனை பொதுச்செயலாளர் ஆக்கும் முடிவில பாஜக உறுதியாக உள்ளது. ஆனால் அதை எப்போது செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. இன்றைக்கு மத்தியில் பாஜக கூட்டணி அரசு அமைவதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான் என்று பாஜக நினைக்கிறது. அதனால் அவரை பழிவாங்க வேண்டும் என்கிற மனநிலையில் உள்ளனர். ஓபிஎஸ் மீது பாஜகவுக்கு என்ன கோபம் என்றால்? அவர் குஜராத்தில் அபார்ட்மெண்ட் எடுத்து குடியிருந்தார். அமித்ஷாவை சந்திப்பதற்காக இந்த ஏற்பாடுகளை செய்தார். மேலும், மத்திய அரசிடம் இருந்து பல்வேறு உதவிகளை பெற்றுக்கொண்ட போதும் ஓபிஎஸ்-க்கு கட்சிக்குள்ளேயே இருந்துகொண்டு எடப்பாடி பழனிசாமியை காலி செய்ய தெரியவில்லை. அவரால் எந்த பயனும் இல்லை என்று கைவிட்டுவிட்டார்கள். அதனால்தான் செங்கோட்டையனை கையில் எடுத்தார்கள். அவர் ஓரே சமுதாயம் என்பதாலும், தென் மாவட்டங்களிலும் செங்கோட்டையனுக்கு ஆதரவு உள்ளதாலும் அவரை கையில் எடுத்துள்ளனர்.

ஓபிஎஸ்க்கு அரசியல் தெரியவில்லை என்று பாஜக தவறான கணக்கு போட்டு விட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் தனியாக போட்டியிட்டு 3 லட்சம் வாக்குகளை வாங்கினோம். சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளை பெறலாம் என்று நினைக்கிறார். ஆனால் பாஜக தரபபிலோ, ஒபிஎஸ் தேர்தலில் வெற்றி பெற வில்லை என்று பார்க்கிறார்கள். ஓபிஎஸ்-ஐ மதிப்பதற்கு பாஜக தயாராக இல்லை. பிரதமர் வருகையின்போது நேரில் சந்திக்க அனுமதி கோரி ஓபிஎஸ் கடிதம் எழுதினார். ஆனால் அதற்கும் அவர்கள் இறக்கம்காட்டவில்லை. உடனே ஓபிஎஸ் பழைய ஆயுதத்தை கையில் எடுத்தார். திமுக தானே உங்களுக்கு எதிரி. அந்த திமுகவிலே நான் போய் சேர்கிறேன் என்ன ஆகிறது என்று பாருங்கள் என்று நினைக்கிறார். இந்நிலையில், அடையாறில் காலையில் முதலமைச்சர் நடைபயிற்சி  சென்றபோது, ஓபிஎஸ்  எதிரே வந்துள்ளார். முதலமைச்சர் எல்லாரையும் போலவே வாங்க.. வாங்க.. என்ன இந்த பக்கம் என்று கேட்டுள்ளார். அப்போது தானும் நடை பயிற்சி மேற்கொள்வதாக கூறிய ஓபிஎஸ், தன்னுடைய மகன் உங்களை பார்க்க விரும்புவதாகவும், வீட்டிற்கு நேரில் வந்து சந்திக்கலாமா? என்று கேட்டுள்ளார். முதலமைச்சர் வீட்டிற்கு வர சொன்னதால், மாலையில் முதலமைச்சரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஓபிஎஸ்-ன் திட்டம் என்ன என்றால்? விஜயோடு சேர்ந்து போட்டியிடலாம் என்று நினைக்கிறார். ஆனால் விஜயிடம் இருந்து  எந்த பதிலும் இல்லை. காரணம் விஜயுடன் இருக்கும் ஆதவ் அர்ஜுனா மற்றும் பாஜகவில் இருந்து அனுப்பப்பட்ட பல்வேறு நபர்கள் பயப்படுகிறார்கள். ஓபிஎஸ் இறங்கி  செல்கிறபோது யாரும் சீண்டவில்லை. யாருமே தன்னை வந்து சந்திக்காததால் ஓபிஎஸ் திடீரென முதலமைச்சரை வந்து பார்த்துள்ளார்.ஒபிஎஸ் திமுகவுக்கு எதிராக செயல்படுவாரோ இல்லை. பாஜக நிச்சயம் காலியாகிவிடும்.  2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக விழும் வாக்குகளை பிரிக்கும் வேலையை அவரிடம் கொடுத்துவிடுவார்கள். அல்லது திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ் வரும்பட்சத்தில் ஒரு 5 சீட்டுகளை  கொடுத்து போட்டியிட வைப்பார்கள். அல்லது விஜய் போன்றவர்களுடன் கூட்டணி அமைத்து, திமுகவுக்கு எதிராக விழுகிற வாக்குகளை சிதறடிக்கும் வேலையை செய்வார்கள்.

விஜய்க்கு அரசியலில் செயல்படும் திறன் இருக்கிறது...... பார்வதி நாயர் பேச்சு!

தவெக தலைவர் விஜய் அமைச்சரவையில் இடம் தருகிறேன் என்று சொல்லியும், யாரும் அவரிடம் போகவில்லை. விஜய்க்கு தேர்தலில் வெற்றி பெறவே வழியில்லை. அவர் எப்படி அடுத்தவர்களுக்கு அமைச்சரவையில் பங்கு தருவார்? விஜயை ஒரு அரசியல்வாதியாகவே யாரும் பொருட்படுத்தவில்லை. திமுகவுக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளது. பாஜக, எடப்பாடி பழனிசாமி என்கிற தனிநபரை தாண்டி எல்லா கட்சிகளும் திமுக உடன் கூட்டணிக்கு வருகிறார்கள். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வமே திமுக பக்கம் வந்துவிட்டார். ஓபி.ரவீந்திரநாத் செஷல்ஸ் தீவுகளில் உள்ள விமான நிலையத்தில் லட்சக்கணக்கான டாலர்களுடன் மாட்டிக்கொண்ட வழக்கு உள்ளது. அதை மீட்டுக்கொடுத்தது பாஜகதான். இல்லாவிட்டால் ஒ.பி.ரவீந்திர நாத் திகார் சிறையில் தான் இருந்திருக்க வேண்டும். அந்த நன்றிக்கடனுக்காகதான் பாஜகவுக்கு விஸ்வாசமாக இருந்தார். காலில் விழுவதுபோல சென்றும் மரியாதை இல்லை என்பதால், இனி அரசியல் செய்ய முடியாது என்று வந்துவிட்டார். தேர்தல் நெருங்கும் வேலையில் பாஜக அவர்களை பிடித்து சிறையில் கூட தள்ள நேரிடும்.

எனக்கு தெரிந்து தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பிடுங்கி விடுவார்கள் என்று நினைக்கிறேன். ராமதாசுக்கு, பாமக மீது உடன்பாடு கிடையாது. அன்புமணி, பாமகவை கொண்டுவந்து விற்றுவிட வேண்டும் என பார்க்கிறார். இந்த மோதல் தான் அங்கே நடந்து கொண்டிருக்கிறது. திடீரென மருத்துவர் ராமதாசும் திமுக கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. திருமாவளவன் சரி வரட்டும் என்று விட்டுக்கொடுத்தார் என்றால் அனைத்துக் கட்சிகளும் வந்துவிடும். அன்புமணி, பணத்திற்காக அரசியலை தவறாக பயன்படுத்தி வருகிறார். அதற்கு காரணம் அவரது மனைவி என்று சொல்கிறார்கள். சௌமியாவின் செயல்கள் காரணமாக தான் குடும்பத்தில் இவ்வளவு பிரச்சினைகள். பாஜக, பாமகவை ஒருபோதும் விடாது. அவர்கள் ஆட்சியை விட்டு போனால்தான் அன்புமணி தப்பிக்க முடியும். திமுக அணி தற்போது வரை பலமான அணியாக இருக்கிறது. இனி போக போக என்ன என்று பார்க்கலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ