அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் அடுத்த போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித், எச் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்திற்கு பின்னர் விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் 62 ஆவது படமான இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஓம் பிரகாஷ் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர். மங்காத்தா படத்திற்கு பின்னர் இந்த கூட்டணி மீண்டும் விடாமுயற்சி திரைப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதேசமயம் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகி ஓராண்டுக்கு மேலாகி விட்டதால் ரசிகர்கள் பலரும் விடாமுயற்சி திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே ரசிகர்களை உற்சாகப்படுத்தும் படக்குழுவினர் அடுத்தடுத்த போஸ்டர்களை அதாவது வாராவாரம் ஒரு போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர் படக் குழுவினர்.
Presenting the look of actor @Aravoffl 🌟 from VIDAAMUYARCHI. 💥 Embracing the spirit of persistence! 💪#VidaaMuyarchi #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @Aravoffl… pic.twitter.com/rGfwbWWsa7
— Lyca Productions (@LycaProductions) August 9, 2024
அதன்படி ஏற்கனவே அஜித் மற்றும் திரிஷா இணைந்துள்ள போஸ்டர் வெளியான நிலையில் அதை தொடர்ந்து அர்ஜுனின் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் தற்போது படத்தில் மற்றொரு வில்லனாக நடித்து வரும் நடிகர் ஆரவ்- ன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் படமானது 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.