spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷ் குரலில் அடுத்த பாடல்.... 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பட அப்டேட்!

தனுஷ் குரலில் அடுத்த பாடல்…. ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பட அப்டேட்!

-

- Advertisement -

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.தனுஷ் குரலில் அடுத்த பாடல்.... 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பட அப்டேட்!

நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். அதே சமயம் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் குபேரா திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்டோரின் நடிப்பில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தினை உண்டர்பார் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் நிறுவனத்தின் சார்பில் கஸ்தூரிராஜாவும் விஜயலட்சுமி கஸ்தூரிராஜாவும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். லியோன் பிரிட்டோ இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. அதைத்தொடர்ந்து இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து கோல்டன் ஸ்பேரோ எனும் பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. கிட்டத்தட்ட முப்பது மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது இந்த பாடல். எனவே அடுத்ததாக இந்த படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பாக ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

we-r-hiring

அந்த பதிவில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் இரண்டாவது பாடல் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் எனவும் அந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கும் ஜி.வி. பிரகாஷ் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. ஆகையினால் கோல்டன் ஸ்பேரோ பாடலைப் போல இந்த பாடலும் பட்டிதொட்டி எங்கும் ட்ரண்டாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ