மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகனாக நடித்து வருபவர் நிவின் பாலி. இவர் இந்த ஆண்டு துறைமுகம், ராமச்சந்திரா பாஸ் & கோ, ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை, வர்ஷங்களுக்கு சேஷம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நிவின் பாலியின் 43 வது படத்தினை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஜன கண மன, குயின் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். நிவின் பாலியுடன் இவர் இணையும் புதிய படம் தேசப்பற்று பற்றிய படமாகவோ அல்லது ராணுவ வீரனைப் பற்றிய கதையாகவோ இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டன. இந்நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ இன்று (டிசம்பர் 25) காலை 10.10 மணிக்கு வெளியாக உள்ளது. இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மிக மிக நீளமான புரோமோ வீடியோவாக இந்த வீடியோ உருவாகியுள்ளது. 6 நிமிடங்கள் 50 நொடிகளுக்கு ஓடக்கூடியதாக இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக படத்தின் அறிவிப்பு வீடியோக்கள் 2 முதல் 3 நிமிடங்கள் என்ற அளவில் மட்டுமே இருக்கும். இப்படத்திற்கு போர்த்தொழில் படத்திற்கு இசையமைத்த ஜேக்ஸ் பீஜோய் இசையமைத்துள்ளார். விரைவில் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளது.
- Advertisement -


