Homeசெய்திகள்சினிமாரஜினி இல்ல....'கூலி' படத்தில் இந்த நடிகருக்கு மகளாக நடிக்கும் ஸ்ருதிஹாசன்!

ரஜினி இல்ல….’கூலி’ படத்தில் இந்த நடிகருக்கு மகளாக நடிக்கும் ஸ்ருதிஹாசன்!

-

- Advertisement -

நடிகை ஸ்ருதிஹாசன், உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.ரஜினி இல்ல....'கூலி' படத்தில் இந்த நடிகருக்கு மகளாக நடிக்கும் ஸ்ருதிஹாசன்! அதை தொடர்ந்து இவர், தனுஷுடன் இணைந்து 3, அஜித்துடன் இணைந்து வேதாளம்,
விஜயுடன் இணைந்து புலி போன்ற பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். தற்போது இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினி, ஸ்ருதிஹாசன் தவிர நாகார்ஜுனா, சத்யராஜ், சௌபின் சாகிர், உபேந்திரா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறது.ரஜினி இல்ல....'கூலி' படத்தில் இந்த நடிகருக்கு மகளாக நடிக்கும் ஸ்ருதிஹாசன்! மேலும் இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி ரஜினிக்கு மகளாக நடிக்கிறாரா? என்பது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், நடிகர் சத்யராஜுக்கு மகளாக நடிக்கிறாராம். அது மட்டும் இல்லாமல் இப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. மற்ற தகவல்கள் இனி வரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ