சூர்யா நடிப்பில் உருவாகியிருந்த கங்குவா திரைப்படம் நேற்று (நவம்பர் 14) உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தமிழ், தெலுங்கு , மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நேற்று திரையிடப்பட்டது. வழக்கம்போல் சூர்யா தனது நடிப்பில் மிரட்டி இருந்தாலும் திரைக்கதையில் சொதப்பிவிட்டார் சிறுத்தை சிவா. அடுத்தது தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை பார்வையாளர்களின் காதுகளை கிழிய வைத்துள்ளது. அந்த அளவிற்கு இரைச்சல் அதிகமாக இருந்தது. இவ்வாறு நெட்டிஷன்கள் பலரும் கங்குவா திரைப்படத்தை ட்ரால் செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த படம் முதல் நாளில் உலக அளவில் 58.62 கோடி வரை வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் படத்தில் இரைச்சல் அதிகமாக இருக்கும் காரணத்தால் வால்யூமை குறைக்கும்படி திரையரங்க உரிமையாளர்களிடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கேட்டுக் கொண்டுள்ள நிலையிலும் நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை தினம் என்பதாலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கங்குவா படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல், நட்டி நடராஜ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.