ஓஹோ எந்தன் பேபி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஓஹோ எந்தன் பேபி. இந்த படத்தில் மிஸ்கின், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மிதிலா பல்கர், அஞ்சு குரியான், கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல், நவிஷ்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியிருக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமும், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஜென் மார்ட்டின் இந்த படத்திற்கு இசையமைக்க ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதாவது நடிகர் ருத்ரா ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே பல கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது. இந்நிலையில் இந்த படமானது 2025 ஜூலை 11ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


