Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்திற்கு இராணுவத்தில் இருந்து கிளம்பிய எதிர்ப்பு!

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்திற்கு இராணுவத்தில் இருந்து கிளம்பிய எதிர்ப்பு!

-

சிவகார்த்திகேயன் தற்போது தனது 21 வது படத்திலும் 23 வது படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். அதில் 21 வது படத்திற்கு அமரன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்திற்கு இராணுவத்தில் இருந்து கிளம்பிய எதிர்ப்பு!மேலும் இப்படம் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷின் இசையிலும் உருவாகி வருகிறது. அதே சமயம் இப்படம் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகி வருகிறது. அதன்படி சிவகார்த்திகேயன் முகுந்த் V என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் பல எதிர்ப்புகளையும் சந்தித்தது. ஏனெனில் இந்த டீசரில் சிவகார்த்திகேயன் கெட்ட வார்த்தை பேசும்படியான வசனம் ஒன்று இருந்தது. இது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்திற்கு இராணுவத்தில் இருந்து கிளம்பிய எதிர்ப்பு! இந்நிலையில் இதன் காரணமாக ராணுவத்திலிருந்து அமரன் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது ராணுவ வீரர் ஒருவரை கௌரவிக்கும் படமாக இப்படம் உருவாகும் என்பதனாலேயே ராணுவ வீரர்களின் பயிற்சி மையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இதுபோன்ற வசனம் இடம் பெற்றிருப்பது ராணுவத்தினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே ராணுவத்தின் தரப்பில் இருந்து தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இது தொடர்பாக மெயில் அனுப்பப்பட்டுள்ளதாம். எனவே படத்தில் இருந்து அந்த வசனம் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ