Homeசெய்திகள்சினிமாதனுஷ் நடிக்கும் படத்தில் கேமியோ ரோலில் ரஜினி - கமல்?

தனுஷ் நடிக்கும் படத்தில் கேமியோ ரோலில் ரஜினி – கமல்?

-

நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ‘கேப்டன் மில்லர். இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார். இத்திரைப்படத்தை அடுத்து தனது 50-வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷண், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை அடுத்து, தெலுங்கில் சேகர் கம்முலா, இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் திரைப்படங்களில் தனுஷ் நடிக்கிறார். இந்நிலையில் இளையராஜா பயோபிக்கில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் ஆர்.பால்கி இப்படத்தை இயக்குவதாக தொடக்கத்தில் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் படத்திலிருந்து விலகினார். இதன் பிறகு இசை அமைப்பாளர் இளையராஜாவே தனது பயோபிக்கின் இயக்குநரை தேர்வு செய்தவாக கூறி, கேப்டன் மில்லர் பட இயக்குநர் அருண் மாதேஸ்வரை தேர்வு செய்தார்.

படத்திற்காக இருவரும் சேர்ந்த பயணிக்கவும் தொடங்கினார். இந்நிலையில், இத்திரைப்படத்தில், கமல் மற்றும் ரஜினிகாந்த் இருவருமே கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இருவருமே மாபெரும் நட்சத்திரங்கள் என்பதால் இதில் சேர்ந்து நடிப்பார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

MUST READ