Homeசெய்திகள்சினிமாசூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி யாரும் பேச வேண்டாம்......இயக்குனர் பி வாசு!

சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி யாரும் பேச வேண்டாம்……இயக்குனர் பி வாசு!

-

சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி யாரும் பேச வேண்டாம் என பி வாசு சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, பிரபு உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு பிறகு 17 வருடங்கள் கழித்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தை பி வாசு இயக்கியுள்ளார். இப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் மாபெரும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர்களான ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் ,பி வாசு, வடிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த விழாவில் பி வாசு, “படம் வெளியாகும் போது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைவரும் பூரண திருப்தியுடன் சென்றது போல் சந்திரமுகி 2 படத்தை பார்த்த பிறகு அதே பரிபூரண திருப்தி உங்களுக்கு கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இன்னொரு விஷயம் கூற வேண்டும் என விரும்புகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் யாரையும் ஒப்பிடாதீர்கள். புரட்சி நடிகர் என்றால் அது எம்ஜிஆர் தான். நடிகர் திலகம் என்றால் அதில் சிவாஜி கணேசன் தான். மேலும் விஜய் அஜித் என ஒவ்வொருவருக்கும் ஒரு தனி அடையாளம் இருக்கிறது. அனைவரும் தனது கடின உழைப்பால் தான் இந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள். அதற்குண்டான பலனை மக்களும் அளிக்கிறார்கள். அதேசமயம் அதற்கு உண்டான பட்டத்தையும் மக்கள் வழங்குவார்கள். அதனால் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி யாரும் பேச வேண்டாம் அதற்கான அவசியமும் இல்லை” என்று பேசியுள்ளார்.

சமீபகாலமாக விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பி வாசு தனது கருத்துக்களை தெரிவித்து இருப்பது இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையில் ஏற்படும் மோதல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி ஆக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ