Homeசெய்திகள்சினிமாபா. ரஞ்சித், மணிகண்டன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்!

பா. ரஞ்சித், மணிகண்டன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்!

-

பா. ரஞ்சித், மணிகண்டன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்!நடிகர் மணிகண்டன், காலா, விக்ரம் வேதா, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு டிஜே ஞானவேல் இயக்கியிருந்த ஜெய் பீம் படத்தில் ராசா கண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதளவும் பேசப்பட்டது. அதன் பிறகு பட வாய்ப்புகள் குவிந்து வர மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அதன்படி கடந்த ஆண்டு விநாயகக் சந்திரசேகரன் இயக்கத்தில் குட் நைட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் மணிகண்டன். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியான இந்த படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று மணிகண்டனுக்கு பாராட்டுகளும் குவிந்தது. அதன் பிறகு குட் நைட் பட கூட்டணியில் லவ்வர் எனும் திரைப்படத்தில் நடித்தார் மணிகண்டன். பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் உருவாகி இருந்தால் லவ்வர் திரைப்படம் கடந்த பிப்ரவரி 9ம் தேதி வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குட் நைட் பட வரிசையில் லவ்வர் திரைப்படமும் வெற்றிப் பாதையில் நகர்ந்து இரண்டாவது வாரத்தில் வெற்றி நடைபெறுகிறது. லவ்வர் திரைப்படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டியும் படக்குழுவினரை வாழ்த்தியும் வருகின்றனர். பா. ரஞ்சித், மணிகண்டன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்!இந்நிலையில் மணிகண்டனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் மணிகண்டன், பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிக்க உள்ள புதிய படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளாராம். மேலும் இந்த படத்தை இயக்க இருக்கும் இயக்குனர், மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் மணிகண்டன் நக்கலைட்ஸ் இயக்குனருடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

MUST READ