நடிகர் ரஜினி தனது 50 ஆண்டு கால திரைப்பயணத்தை நிறைவு செய்வதை கொண்டாடும் விதமாக படையப்பா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த 1999 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் படையப்பா திரைப்படம் வெளியானது. இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவாஜி கணேசன், லட்சுமி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன், செந்தில், அப்பாஸ், சித்தாரா, ராதா ரவி, நாசர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று நூறு நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. இந்த படத்தில் இடம்பெற்ற படையப்பா மற்றும் நீலாம்பரியின் கதாபாத்திரங்களை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு ரஜினிகாந்தும் ரம்யா கிருஷ்ணனும் தனது நடிப்பின் மிரட்டி இருப்பார்கள். மேலும் ஏ ஆர் ரகுமானின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படம் இன்று வரையிலும் ரசிகர்களின் ஃபேவரைட் படங்களில் ஒன்று.
இந்நிலையில் நடிகர் ரஜினி சினிமா துறையில் நுழைந்து 50 ஆண்டுகளை இந்த வருடத்துடன் நிறைவு செய்கிறார். எனவே இதனை கொண்டாடும் விதமாக படையப்பா திரைப்படத்தினை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். இதனை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரும் உறுதி செய்துள்ளார். அதன்படி விரைவில் இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.