சமீபகாலமாக மற்ற மாநிலங்களில் வெளியிடப்படும் பெரிய படங்களை அதிகாலையில் பார்த்துவிட்டு உடனடியாக யூட்யூபில் அந்த படத்தை விமர்சனம் செய்கின்றனர். இதனால் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு திரையிடப்படும் அந்த படங்களுக்கு வரவேற்பு கிடைப்பதில்லை. ஆதலால் தியேட்டர் வளாகத்தில் பொதுமக்களிடம் படம் குறித்து பேட்டி எடுக்கக் கூடாது என தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் திரையரங்க உரிமையாளர்களுக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும்கோரிக்கை வைத்திருந்தார். இது தொடர்பாக திரைப்படங்களும் தங்களின் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி சமீபத்தில் கூட இயக்குனர் சீனு ராமசாமி, திரையரங்க வளாகத்தில் பொதுமக்களிடம் விமர்சனம் கேட்பதற்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க வேண்டும் எனவும் விமர்சனங்கள் இல்லை என்றால் சிறிய படங்கள் கவனம் பெறாமல் போய்விடும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் சீனு ராமசாமி என் கருத்துக்கு நீங்கள் என்ன பதில் அளிக்கிறீர்கள் என்று பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பார்த்திபன், “விமர்சனம் இருக்க வேண்டும் என்பது அவருடைய கருத்து. அதாவது ஒரு படத்தின் விமர்சனம் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் அது அனைவருக்கும் பயன்படும். இரண்டு நாட்களுக்குள் ஒரு படத்தை பற்றி மோசமான விமர்சனங்கள் வரும்போது தயாரிப்பாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். நம்முடைய ப்ராடக்ட்டை வெளியில் கொண்டு வந்து வைக்கும் போது அதை மக்கள் வாங்கி பார்க்க வேண்டும். அது சோப்பாக இருந்தாலும் சரி ஷாம்பாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி அதை மக்கள் பார்த்துவிட்டு நன்றாக இல்லை என்று சொன்னால் விமர்சனம் பண்ணாலும் பண்ணவில்லை என்றாலும் அந்த படம் கூடவே ஓடாது. இவ்வளவு கோடி பட்ஜெட்டில் கஷ்டப்பட்டு எடுக்கின்ற ஒரு படத்தை ஒரே நிமிஷத்தில் தூக்கி எறிவது வருத்தமளிக்கிறது” என்று தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
கஷ்டப்பட்டு எடுக்கிற ஒரு படத்தை ஒரே நிமிஷத்தில் தூக்கி எறிவது வருத்தமளிக்கிறது…. பார்த்திபன் பேட்டி!
-
- Advertisement -