பாட்னர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்துள்ளது.
ஆதி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் பாட்னர். இதில் ஆதியுடன் இணைந்து ஹன்சிகா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பாண்டியராஜன், பாலக் லால்வாணி, ரோபோ சங்கர் முனீஸ் காந்த், ஜான் விஜய் ஆகியோர் நடித்திருந்தனர். மனோஜ் தாமோதரன் இதனை எழுதி இயக்கியிருந்தார். ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. சபீர் அகமது ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருந்தார்.

காமெடி கலந்த சயின்ஸ் பிக்சன் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் நாளை (அக்டோபர் 6) சிம்ப்ளி சௌத் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


