spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமாவீரன் படப்பிடிப்பு மார்ச் இறுதிக்குள் முடிக்க திட்டம்!

மாவீரன் படப்பிடிப்பு மார்ச் இறுதிக்குள் முடிக்க திட்டம்!

-

- Advertisement -

மார்ச் மாத இறுதிக்குள் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படப்பிடிப்பை முடிக்க திட்டம்! இரவுநேர சண்டைக்காட்சிகள் அடங்கிய க்ளைமாக்ஸ் படமாக்கப்பட்டு வருகிறது!

‘மண்டேலா’ திரைப்படத்திற்கா தேசிய விருது பெற்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மாவீரன்‘ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் செய்தியாளராக நடித்து வருகிறார்.

we-r-hiring

மேலும் இத்திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு, மாவீரன் படத்தின் முதல் பாடலை வெளியிட்டது படக்குழு. அனிரூத் பாடிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த “ப்ரின்ஸ்” திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. ப்ரின்ஸ் பட தோல்வியினால் ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் வடசென்னையில் மாவீரன் படத்தின் இரவுநேர சண்டைக்காட்சிகள் அடங்கிய க்ளைமாக்ஸ் படமாக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் இம்மாத இறுதிக்குள் எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஒருபுறம் டீசர் தயாரிக்கும் பணியிலும் பட குழு இடுபட்டுள்ளது. விரைவில் படத்திற்கான டீசர் அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ