Homeசெய்திகள்சினிமாகேலி, கிண்டல்களுக்கு ஆளாகிய ராஷ்மிகா மந்தனா... அரசியல் ஈடுபாட்டால் வந்த சிக்கல்...

கேலி, கிண்டல்களுக்கு ஆளாகிய ராஷ்மிகா மந்தனா… அரசியல் ஈடுபாட்டால் வந்த சிக்கல்…

-

ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட வீடியோவால், அவர் சமூக வலைதளங்களில் கேலி, கிண்டல்களுக்கு ஆளாகி இருக்கிறார்.

தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். இறுதியாக அவரது நடிப்பில் அனிமல் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது தி கேர்ள் பிரண்ட், ரெயின்போ, புஷ்பா இரண்டாம் பாகம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் மும்பை மற்றும் நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள அடல் சேது பாலம் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 10 ஆண்டு கால பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சியை பாருங்கள், இது பெருமை அளிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். மோடிக்கு ஆதரவாகவும், புகழாரம் சூட்டியும் ராஷ்மிகா மந்தனா பேசியிருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

ராஷ்மிகாவின் அந்த வீடியோவை பாராட்டி பிரதமர் மோடியும் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, மோடி அரசு மீது எதற்கு இந்த பாராட்டு என்று காங்கிரஸ் கட்சியினரும், எதிர் கட்சியினரும் கண்டன பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். வருமான வரி சோதனையில் இருந்த தப்பிக்க காக்கா பிடியா என்று பலரும் இணையத்தில் ராஷ்மிகாவை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.

MUST READ