Homeசெய்திகள்சினிமா'சூர்யா 44' படப்பிடிப்பை நிறைவு செய்த பூஜா ஹெக்டே!

‘சூர்யா 44’ படப்பிடிப்பை நிறைவு செய்த பூஜா ஹெக்டே!

-

நடிகை பூஜா ஹெக்டே, சூர்யா 44 படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.'சூர்யா 44' படப்பிடிப்பை நிறைவு செய்த பூஜா ஹெக்டே!

நடிகர் சூர்யா கங்குவா படத்திற்கு பிறகு சூர்யா 44 எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார். ஸ்ரேயா கிருஷ்ணா இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யாவின் 2D நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து படத்தினை தயாரிக்கிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இவர்களுடன் இணைந்து கருணாகரன், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் அந்தமான் பகுதியில் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஊட்டி, கேரளா போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அடுத்த வாரம் சென்னையில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 'சூர்யா 44' படப்பிடிப்பை நிறைவு செய்த பூஜா ஹெக்டே!இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது போர்ஷன்களை நிறைவு செய்துள்ளார் என்று தகவல் கிடைத்திருக்கிறது. எனவே படக்குழுவினர், பூஜா ஹெக்டேவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனை பூஜா ஹெக்டே தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அடுத்த மாதத்திற்குள் சூர்யா 44 படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தது சூர்யா 44 படமானது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ