ஸ்போர்ட்ஸ் பயோபிக் படத்தில் நடித்த தனக்கு விருப்பம் உள்ளதாக பிரபல நடிகை கௌரி கிஷன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான படம் 96. இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இதில் திரிஷாவின் இளம் வயது தோற்றத்தில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை கௌரி கிஷன். ஜானு என்ற கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்த நிலையில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன்படி மாஸ்டர், பிகினிங், அடியே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக மார்ச் 29ஆம் தேதி வெளியாக உள்ள ஹாட் ஸ்பாட் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கௌரி கிஷன். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய கௌரி கிஷன், தனக்கு ஸ்போர்ட்ஸ் பயோபிக் படத்தில் நடிக்க விருப்பம் உள்ளதாக கூறியுள்ளார். அதே சமயம், “நான் நடிக்கும் கதாபாத்திரம் எனக்கு மட்டும் பிடித்திருந்தால் போதாது பார்வையாளர்களுக்கும் பிடித்திருக்க வேண்டும். திரில்லர், ஹாரர் போன்ற படங்களை விட ஸ்போர்ட்ஸ் பயோபிக் படம் சவாலானதாக இருக்கும். நிறைய ஹார்டுஓர்க்கும் செய்ய வேண்டியிருக்கும்” என்று தொடர்ந்து பேசினார்.