spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதள்ளிப்போகும் புறநானூறு படப்பிடிப்பு..... என்ன காரணம்?

தள்ளிப்போகும் புறநானூறு படப்பிடிப்பு….. என்ன காரணம்?

-

- Advertisement -

நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.தள்ளிப்போகும் புறநானூறு படப்பிடிப்பு..... என்ன காரணம்? இந்தப் படத்திற்கு புறநானூறு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சூரரைப் போற்று படத்திற்கு பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள நிலையில் இந்த படத்திற்கும் ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைக்க உள்ளார்.தள்ளிப்போகும் புறநானூறு படப்பிடிப்பு..... என்ன காரணம்? மேலும் இப்படம் 1950 கால கட்டங்களில் ஹிந்தி திணிப்பு போராட்டத்தை எதிர்த்து நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் 2024 பிப்ரவரியில் தொடங்கப்படும் என்று ஏற்கனவே கூறப்பட்டது. ஆனால் தற்போது இதன் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டு மார்ச் 1ஆம் தேதி மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தள்ளிப்போகும் புறநானூறு படப்பிடிப்பு..... என்ன காரணம்?இந்நிலையில் புறநானூறு படப்பிடிப்பு தாமதமாவதற்கான காரணம் தெரியவந்துள்ளது. அதாவது சூர்யா, கங்குவா படத்தின் டப்பிங் பணிகளை முடித்தவுடன் புறநானூறு படப்பிடிப்பில் இணைவதாக கூறியிருந்தாராம். அதன்படி தற்போது டப்பிங் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து புறநானூறு படத்தில் இணைய உள்ளார் சூர்யா. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ