பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இவர் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம்
சலார். பிரசாந்த் நீல் இயக்கி இருந்த இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் வெளியான மூன்று நாட்களிலேயே 402 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
On Sankranthi Day,
Alongside the rising sun, The Rebel Star will rise early to give you all a Double Treat 🤟🏻
Unveiling the Title & First Look at 7:08AM on Jan 15th 🤩
Get ready for #PrabhasPongalFeast 😎#Prabhas
A @DirectorMaruthi film. @vishwaprasadtg @peoplemediafcy… pic.twitter.com/b3HC70kccY
— People Media Factory (@peoplemediafcy) January 13, 2024

இதைத்தொடர்ந்து பிரபாஸ் தனது 24 வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் மாருதி இயக்குகிறார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வருகின்ற ஜனவரி 15 பொங்கல் தினத்தன்று (நாளை) காலை 7.08 மணி அளவில் வெளியாகும் என பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து யோகி பாபு, அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.


