spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

பிரதீப் ரங்கநாதன் பிறந்த நாளை முன்னிட்டு டிராகன் படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகி உள்ளது.பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானாலும் லவ் டுடே திரைப்படம் தான் இவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதே சமயம் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் டிராகன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படத்தை ஓ மை கடவுளே படத்தின் மூலம் பிரபலமான அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் அதை தொடர்ந்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு! அடுத்ததாக இந்த படத்தை 2024 நவம்பர் மாதத்தில் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனின் 31வது பிறந்த நாளான இன்று (ஜூலை 25) அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக டிராகன் பட குழுவினர் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ