Homeசெய்திகள்சினிமா'டிராகன்' வெற்றியை தொடர்ந்து பிரதீப் நடிக்கும் புதிய படம்.... படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

‘டிராகன்’ வெற்றியை தொடர்ந்து பிரதீப் நடிக்கும் புதிய படம்…. படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

-

- Advertisement -

டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.'டிராகன்' வெற்றியை தொடர்ந்து பிரதீப் நடிக்கும் புதிய படம்.... படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன் கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் லவ் டுடே எனும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமாகி இருந்தார். அதன்படி பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தார் பிரதீப்.'டிராகன்' வெற்றியை தொடர்ந்து பிரதீப் நடிக்கும் புதிய படம்.... படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இதைத்தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். கல்லூரி சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இந்த படத்தினை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன், அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக ஏற்கனவே பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்தது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கிறார்.'டிராகன்' வெற்றியை தொடர்ந்து பிரதீப் நடிக்கும் புதிய படம்.... படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மேலும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இப்படம் தொடர்பான முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை (மார்ச் 26) காலை 11.07 மணியளவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதனுக்கு இந்த படமும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ