Homeசெய்திகள்சினிமாமனோஜ் பாரதிராஜாவின் மறைவு.... ஒத்திவைக்கப்பட்ட பிரதீப் ரங்கநாதன் பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

மனோஜ் பாரதிராஜாவின் மறைவு…. ஒத்திவைக்கப்பட்ட பிரதீப் ரங்கநாதன் பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

-

- Advertisement -

மனோஜ் பாரதிராஜா மறைவின் காரணமாக பிரதீப் ரங்கநாதனின் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மனோஜ் பாரதிராஜாவின் மறைவு.... ஒத்திவைக்கப்பட்ட பிரதீப் ரங்கநாதன் பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் லவ் டுடே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை இவர் தானே இயக்கி நடித்து இருந்த நிலையில் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே ரூ. 100 கோடியை அள்ளினார் பிரதீப். இதைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் திரைப்படம் வெளியாகி இந்த படமும் மெகா பிளாக்பஸ்டர் லிஸ்டில் இணைந்தது. இதற்கிடையில் இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த ஆண்டிற்குள் இப்படம் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் என சமீபகாலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் மமிதா பைஜூ, அனு இமானுவேல், ஐஸ்வர்யா ஷர்மா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கப் போகிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று (மார்ச் 26) காலை 11.07 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் மனோஜ் பாரதிராஜாவின் மறைவின் காரணமாக இந்த அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும், இன்று சில மணி நேரங்களுக்கு பின்னர் அது வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ