பிரசாந்த் நடிக்கும் அந்தகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அந்தகன். இந்த படத்தில் பிரசாந்துடன் இணைந்து சிம்ரன், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் நிலையில் சமீபத்தில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இந்த படத்தை இயக்கி ஸ்டார் மூவிஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ப்ரீத்தி தியாகராஜன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படமானது ஏற்கனவே 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என பட குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதைத்தொடர்ந்து தற்போது இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படமும் அதே நாளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி மொழியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த அந்தகன். அந்தாதுன் திரைப்படம் ஏற்கனவே மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை கவர்ந்த இந்த படம் தற்போது தமிழில் ரிலீஸாகி அதை போல் ரசிகர்களின் பேராதரவை பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.