spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் பிரேமலு பட நாயகி!

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் பிரேமலு பட நாயகி!

-

- Advertisement -

பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர். அந்த வகையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமான இவர் தன்னுடைய லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் பிரேமலு பட நாயகி! அதைத்தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அதன்படி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் எல்ஐசி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்ட நிலையில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அதாவது இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தி ஈஸ்வரன் இயக்க இருப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் இதன் படப்பிடிப்புகளும் 2024 செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருக்கிறதாம்.பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் பிரேமலு பட நாயகி! இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் கதாநாயகியாக பிரேமலு படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கவர்ந்த மமிதா பைஜூ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை மமிதா பைஜூ, தமிழில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ரெபல் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ