Homeசெய்திகள்சினிமாடாப் 10னில் ஒருவராக வலம் வரும் பிரியா

டாப் 10னில் ஒருவராக வலம் வரும் பிரியா

-

திரையுலகில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத்திரையில் நடிகையாக திரை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

சின்ன திரையில் இருந்து வெளிவந்து வெள்ளி திரையில் இவர் நடித்த முதல் திரைப்படம் மேயாத மான். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்தில் நடித்திருந்தார். அதன் பின்னா் மான்ஸடர், ஹாஸ்டல், யானை, குருதி ஆட்டம, திருச்சிற்றம்பலம் என நான்கு படங்கள் வெளியானது. மேலும் இவர் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கிறார்.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் படத்தில் பிரியா பவானி நடித்துள்ளார். இப்படம் வருகின்ற மார்ச் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து சிம்பு, கவுதம் கார்த்திக்குடன் சேர்ந்து பிரியா பவானி நடித்துள்ள பத்துதல திரைப்படம் மார்ச் 30-ல் வெளியாகிறது.

மேலும் இவர், நடிகர் ராகவலாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் படத்திலும் நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 14 -ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், வரும் 35 நாட்களில் பிரியா பவானி நடித்திருக்கும் 3 படங்கள் வெளியாக இருக்கிறது. இது மட்டுமின்றி பொம்மை, டிமான்டி காலனி 2 போன்ற படங்களிலும் நடிக்க உள்ளார்.

MUST READ