Homeசெய்திகள்சினிமாஇந்த ஆண்டில் வெளியான 45 படங்களில் 4 மட்டுமே ஹிட்... பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!

இந்த ஆண்டில் வெளியான 45 படங்களில் 4 மட்டுமே ஹிட்… பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!

-

- Advertisement -

சமீப காலமாக தமிழ் திரைப்படங்களை விட மலையாள திரைப்படங்களே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கேரளாவை தாண்டி தமிழ்நாட்டிலும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகிறது. இந்த ஆண்டில் வெளியான 45 படங்களில் 4 மட்டுமே ஹிட்... பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!இருப்பினும் சில தமிழ் படங்கள் வெற்றி படங்களாக அமைந்து தமிழ் ரசிகர்களை பெருமூச்சு விட வைத்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டில் தற்போது வரை 45 படங்கள் வெளியாகியிருந்தாலும் அதில் 4 படங்கள் மட்டுமே ஹிட் கொடுத்திருப்பதாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறியுள்ளார். அதில் மதகஜராஜா, குடும்பஸ்தன், விடாமுயற்சி, டிராகன் ஆகிய நான்கு படங்கள்தான் ஹிட் படங்களாக அமைந்திருப்பதாக கூறியுள்ளார்.

மதகஜராஜா

விஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் மதகஜராஜா.இந்த ஆண்டில் வெளியான 45 படங்களில் 4 மட்டுமே ஹிட்... பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்! இந்த படத்தில் விஷால் தவிர அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பின் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

குடும்பஸ்தன்

மணிகண்டன் நடிப்பில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி குடும்பஸ்தன் திரைப்படம் வெளியானது. இந்த ஆண்டில் வெளியான 45 படங்களில் 4 மட்டுமே ஹிட்... பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!அறிமுக இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி இருந்த இந்த படம் காமெடி கலந்த கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விடாமுயற்சி

கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அஜித் நடிப்பில் விடாமுயற்சி எனும் திரைப்படம் வெளியானது. மகிழ் திருமேனி இயக்கியிருந்த இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார். இந்த ஆண்டில் வெளியான 45 படங்களில் 4 மட்டுமே ஹிட்... பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ஹிட் அடித்துள்ளது.

டிராகன்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்த திரைப்படம் தான் டிராகன். இந்த படம் கடந்த பிப்ரவரி 21 அன்று திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் திரைப் பிரபலங்களையும் வெகுவாகக் கவர்ந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.இந்த ஆண்டில் வெளியான 45 படங்களில் 4 மட்டுமே ஹிட்... பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்! அந்த வகையில் இப்படம் 10 நாட்களில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

எனவே இந்த ஆண்டில் வெளியான 45 திரைப்படங்களில் 4 படங்கள் மட்டுமே ஹிட் படங்களாக அமைந்துள்ளது எனவும் அதில் டிராகன் படம் மெகா ஹிட் படமாக அமைந்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்.

MUST READ