அஜித் மற்றும் சிறுத்தை சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணையப் போகும் தகவலை தயாரிப்பாளர ஞானவேல் ராஜா உறுதி செய்துள்ளார்.சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருந்த கங்குவா எனும் திரைப்படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். சூர்யா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் திஷா பதானி ஹீரோயினாக நடித்திருந்தார். பாபி தியோல் வில்லனாக நடித்திருந்தார். 3D தொழில்நுட்பத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் இந்த படம் கிளைமாக்ஸ் -இல் கங்குவா 2 படத்திற்கான லீட் கொடுத்து முடிக்கப்பட்டது. எனவே கங்குவா 2 திரைப்படத்தையும் இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார் சிறுத்தை சிவா. ஆனால் இதற்கிடையில் இவர் அஜித்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
அதாவது ஏற்கனவே அஜித் நடிப்பில் வேதாளம், வீரம், விஸ்வாசம், விவேகம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் சிறுத்தை சிவா. அடுத்ததாக ஐந்தாவது முறையாக அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணி இணைய இருக்கிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. அதன்படி, சிறுத்தை சிவா, அஜித் படத்தை முடித்த பின்னர் கங்குவா 2 படத்தை தொடங்குவார் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அப்டேட் கொடுத்து அஜித் – சிறுத்தை சிவா மீண்டும் இணைய போவதை உறுதி செய்துள்ளார்.
- Advertisement -