spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'வாடிவாசல்' படத்தில் சூர்யா தான் நடிப்பார்.... உறுதி செய்த தயாரிப்பாளர் தாணு!

‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா தான் நடிப்பார்…. உறுதி செய்த தயாரிப்பாளர் தாணு!

-

- Advertisement -

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படமானது 2024 அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'வாடிவாசல்' படத்தில் சூர்யா தான் நடிப்பார்.... உறுதி செய்த தயாரிப்பாளர் தாணு!அதைத்தொடர்ந்து சூர்யா, பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான் போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நடிகர் சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. 'வாடிவாசல்' படத்தில் சூர்யா தான் நடிப்பார்.... உறுதி செய்த தயாரிப்பாளர் தாணு!அதன்படி நடிகர் சூர்யாவும் படத்திற்காக பல பயிற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் வெற்றிமாறன் விடுதலை இரண்டாம் பாகத்தில் பிசியாக இருந்ததால் வாடிவாசல் படம் தொடர்பான அப்டேட்டுகள் எதுவும் வெளிவரவில்லை. எனவே சமூக வலைதளங்களில் வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டது என்று செய்திகள் பரவத் தொடங்கியது. இது ஒரு பக்கம் இருந்தாலும் நடிகர் சூர்யா புறநானூறு திரைப்படத்திலிருந்து விலகியது போல வாடிவாசல் திரைப்படத்திலிருந்தும் விலகிவிட்டார் என்றும் அவருக்கு பதிலாக தனுஷ் அல்லது சூரி இருவரில் யாரேனும் ஒருவர் நடிக்கப் போகிறார் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் தான் வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் நடந்த பேட்டியில், “வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா தான் நடிப்பார். அவர் என்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார். வெற்றிமாறன் விடுதலை 2 படத்தை முடித்த பின்னர் வாடிவாசல் படம் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ