Homeசெய்திகள்சினிமாமார்க் ஆண்டனி வெற்றிக்காக இயக்குநருக்கு விலை உயர்ந்த பரிசு

மார்க் ஆண்டனி வெற்றிக்காக இயக்குநருக்கு விலை உயர்ந்த பரிசு

-

- Advertisement -

மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, படத்தின் இயக்குநருக்கு தயாரிப்பாளர் சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது.

மார்க் ஆண்டனி படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 28ஆம் தேதி இறைவன் மற்றும் சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்கள் வெளியான போதிலும் மார்க் ஆண்டனி படத்தின் வசூல் குறையவே இல்லை. இந்நிலையில் இந்த படம் 101 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக, படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தயாரிப்பாளர் வினோத் குமார், பி.எம்.டபுள்யூ சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார். இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

MUST READ