- Advertisement -
ஹிப்ஹாப் ஆதி நடித்திருக்கும் பிடி சார் திரைப்படம், 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.
ஆல்பம் பாடல்களைத் தொடர்ந்து, சினிமாவுக்கு வந்த ஹிப்ஹாப் ஆதி பல படங்களுக்கு இசை அமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். சுந்தர் சி இயக்கிய அரண்மனை உள்பட பெரும்பாலான படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி பாடிய பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளன. இதைத் தொடர்ந்து மீசைய முறுக்கு படத்தில் நாயகனாக அறிமுகனார். முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இளைஞர்களின் விருப்ப நாயகனாவும் அவர் மாறினார்.

அதையடுத்து நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இத்திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதையடுத்து இறுதியாக அவரது நடிப்பில் வீரன் திரைப்படம் வெளியானது. தற்போது ஆதி நடித்துள்ள திரைப்படம் பிடி சார். கார்த்திக் வேனுகோபாலன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜ் உள்பட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.