Homeசெய்திகள்சினிமாரசிகர்களின் கவனம் ஈர்க்கும் 'புஷ்பா 2' பட 'கிஸ்ஸிக்' பாடலின் ப்ரோமோ வீடியோ!

ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் ‘புஷ்பா 2’ பட ‘கிஸ்ஸிக்’ பாடலின் ப்ரோமோ வீடியோ!

-

- Advertisement -
kadalkanni

புஷ்பா 2 படத்திலிருந்து கிஸ்ஸிக் பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அல்லு அர்ஜுன் நடிக்கும் தற்போது உருவாகியுள்ள படம் தான் புஷ்பா 2. இந்த படத்தை சுகுமார் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் 'புஷ்பா 2' பட கிஸ்ஸிக் பாடலின் ப்ரோமோ வீடியோ! தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. ஏனென்றால் கடந்த 2021 இல் வெளியான புஷ்பா 1 திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் இந்திய அளவில் பிரபலமானது. எனவே தற்போது உருவாகி வரும் இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியிலான ஆர்வத்தை தூண்டி உள்ளது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் படு வைரலானது. அதேசமயம் ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்ததாக கிஸ்ஸிக் எனும் பாடல் நாளை (நவம்பர் 24) இரவு 7.02 மணி அளவில் வெளியாக இருக்கிறது. தற்போது இதற்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதை பார்க்கும் போது புஷ்பா 1 படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்றியா” பாடலைப் போல் இந்த பாடலும் பட்டி தொட்டி எங்கிலும் பட்டைய கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பாடலில் அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்ரீ லீலா ஆகிய இருவரும் நடனமாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ