Homeசெய்திகள்சினிமாகவனம் ஈர்க்கும் 'புஷ்பா 2' பஹத் பாசிலின் ஸ்பெஷல் போஸ்டர்!

கவனம் ஈர்க்கும் ‘புஷ்பா 2’ பஹத் பாசிலின் ஸ்பெஷல் போஸ்டர்!

-

புஷ்பா 2 படத்தில் பகத் பாசிலின் ஸ்பெஷல் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு சுகுமாரன் இயக்கத்தில் புஷ்பா திரைப்படம் வெளியானது. புஷ்பா தி ரைஸ் என்ற தலைப்பில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பான் இந்திய அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க  அல்லு அர்ஜுனி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் பகத் பாஸில் வில்லனாக மிரட்டி இருந்தார். வனத்துறை அதிகாரியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. புஷ்பா தி ரூல் இன்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுகுமாரன் இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் பகத் பாசிலின் 41வது பிறந்த நாளை முன்னிட்டு புஷ்பா தி ரூல் படத்தில் பகத் பாசில் ஸ்பெஷல் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது கவனம் பெற்று வருகிறது.

MUST READ