spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாராகவா லாரன்ஸ் குடும்பத்தில் உதயமாகும் மற்றொரு ஹீரோ!

ராகவா லாரன்ஸ் குடும்பத்தில் உதயமாகும் மற்றொரு ஹீரோ!

-

- Advertisement -

ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர், இயக்குனர், நடன அமைப்பாளரான ராகவா லாரன்ஸ் இன் தம்பி எல்வின் லாரன்ஸ் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் கதாநாயகியாக தெலுங்கு நடிகை வைஷாலி ராஜ் நடிக்கிறார். இவர்களுடன் சிவா சாரா, ஆர் சுந்தர்ராஜன், கே பி ஒய் வினோத், சென்ட்ராயன், சாம்ஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதில் ராகவாலாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான டைரி திரைப்படத்தின் இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்குகிறார். இந்த படத்திற்கு புல்லட் BULLET என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கதிரேசன் தயாரிக்கிறார்.
சாம் சி எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பூஜை நேற்று தொடங்கிய நிலையில் படப்பிடிப்புகள் சென்னை, ஹைதராபாத், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற இருப்பதாக தெரியவந்துள்ளது.

we-r-hiring

மேலும் ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாக உள்ள இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராக உள்ளது.

MUST READ