நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா ஆகியோர் இணைந்து மாற்றம் என்ற சேவை அமைப்பை தொடங்கியுள்ளனர்.
ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் கடைசியாக சந்திரமுகி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக பென்ஸ், ஹண்டர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இது ஒரு பக்கம் இருந்தாலும் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மக்களுக்கும், பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் கல்விக்காகவும் ஏராளமான நலத்திட்டங்களை செய்து வருகிறார்.
சமீபத்தில் கூட கலக்கப்போவது யாரு பாலாவுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் வாங்கி கொடுத்து உதவி செய்து வந்தார். இந்நிலையில் சேவையை கடவுள் என்ற அறக்கட்டளை மூலமாக மாற்றம் என்ற சேவை அமைப்பை தொடங்கி இருக்கிறார். இந்த அமைப்பில் எஸ் ஜே சூர்யா, KPY பாலா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து செயல்பட இருக்கின்றனர். நேற்று உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
Hi friends and fans! I am excited to announce that Maatram’s service begun today. As I mentioned in our press meet, we will be presenting 10 tractors to financially struggling farmers. Our first tractor was presented to RajaKannan family from Vilupuram District, who is now solely… pic.twitter.com/7XePCpNweb
— Raghava Lawrence (@offl_Lawrence) May 1, 2024

இதன் முதற்கட்டமாக கஷ்டப்படும் பத்து விவசாய குடும்பங்களுக்கு டிராக்டர் வழங்க இருப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி நேற்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா கண்ணன் என்பவரின் குடும்பத்திற்கு முதல் டிராக்டரை பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ராகவா லாரன்ஸின் இந்த செயல் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
