ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இவர், புல்லட், ஹண்டர், கால பைரவா போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் காஞ்சனா 4 படத்தையும் தானே இயக்கி, நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இது தவிர, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். சாய் அபியங்கர் இருந்து படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், நிவின் பாலி, மாதவன் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அதே சமயம் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜின் எல்சியுவில் இணைந்துள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இப்படத்தின் சில முக்கிய காட்சிகளை வெளிநாட்டில் படமாக படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரிய வந்திருக்கிறது. எனவே அடுத்தடுத்து அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.