spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதான் வாழ்ந்த வீட்டை இலவச பள்ளியாக மாற்றும் ராகவா லாரன்ஸ்.... குவியும் பாராட்டுக்கள்!

தான் வாழ்ந்த வீட்டை இலவச பள்ளியாக மாற்றும் ராகவா லாரன்ஸ்…. குவியும் பாராட்டுக்கள்!

-

- Advertisement -

ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருகிறார்.தான் வாழ்ந்த வீட்டை இலவச பள்ளியாக மாற்றும் ராகவா லாரன்ஸ்.... குவியும் பாராட்டுக்கள்! அந்த வகையில் இவர் தற்போது ‘பென்ஸ்’, ‘கால பைரவா’ போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இது தவிர ‘காஞ்சனா 4’ எனும் திரைப்படத்தை தானே இயக்கி, நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம், குழந்தைகள், ஏழை எளியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இவர் கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்டங்களை செய்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் ‘காஞ்சனா 4’ படப்பிடிப்பு தொடங்கியதால் அதன் முன் பணத்தை வைத்து தன்னுடைய சொந்த வீட்டை பள்ளிக்கூடமாக மாற்ற முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.தான் வாழ்ந்த வீட்டை இலவச பள்ளியாக மாற்றும் ராகவா லாரன்ஸ்.... குவியும் பாராட்டுக்கள்!இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. எப்போதும் என்னுடைய படத்திற்கு அட்வான்ஸ் வாங்கினால், அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு நல்ல காரியத்திற்கு ஒதுக்கி வைத்துக் கொள்வேன். குரூப் டான்ஸராக இருக்கும்போது அம்மாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து வைத்து கட்டிய வீடு இது. 20 வருடத்திற்கு முன்பு குழந்தைகளுக்காக கொடுத்துவிட்டு நாங்கள் வாடகை வீட்டிற்கு சென்றோம். இப்போது மறுபடியும் இந்த வீட்டை நல்ல காரியத்திற்கு பயன்படுத்த போகிறோம்.

எதை எதையோ இலவசமாக தருகிறோம். கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அதனால் நான் கட்டிய இந்த வீட்டை கொஞ்சம் மாற்றம் செய்து இலவச கல்வி கொடுக்க முடிவு செய்துள்ளேன். இந்த வீட்டில் நான் வளர்த்த பெண் இந்தப் பள்ளிக்கூடத்தின் முதல் டீச்சராகிறார்” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து ராகவா லாரன்ஸுக்கு தங்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ