Homeசெய்திகள்சினிமா'புஷ்பா 2' ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்த ராஜமௌலி.... வைரலாகும் புகைப்படம்!

‘புஷ்பா 2’ ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்த ராஜமௌலி…. வைரலாகும் புகைப்படம்!

-

இயக்குனர் ராஜமௌலி, புஷ்பா 2 படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.'புஷ்பா 2' ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்த ராஜமௌலி.... வைரலாகும் புகைப்படம்!

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா தி ரைஸ் எனும் திரைப்படம் வெளியானது. செம்மரக்கட்டை கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூலிலும் அடித்து நொறுக்கியது. அடுத்ததாக அல்லு அர்ஜுன் புஷ்பா தி ரூல் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை முதல் பாகத்தை இயக்கியிருந்த சுகுமார் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படமானது வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது.'புஷ்பா 2' ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்த ராஜமௌலி.... வைரலாகும் புகைப்படம்! இந்நிலையில் பாகுபலி, ஆர் ஆர் ஆர் ஆகிய படங்களை இயக்கிய ராஜமௌலி, புஷ்பா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தினை இயக்குனர் சுகுமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ