Homeசெய்திகள்சினிமாஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ரஜினி- கமல்.... வைரலாகும் புகைப்படங்கள்!

ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ரஜினி- கமல்…. வைரலாகும் புகைப்படங்கள்!

-

- Advertisement -

ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ரஜினி, கமல் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ரஜினி- கமல்.... வைரலாகும் புகைப்படங்கள்!

பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். மேலும் இவர் வேல்ஸ் யுனிவர்சிட்டியின் நிறுவனரும் ஆவார். இவருடைய மகள் பிரீத்தாவின் திருமணம் இன்று ( மே 9) ஆர்கே மஹாலில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ரஜினி- கமல்.... வைரலாகும் புகைப்படங்கள்!இந்த திருமணத்திற்கு 10 ஆயிரத்திற்கும் மேலானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே சென்னை ஈசிஆரில் ரூ. 30 கோடி பட்ஜெட்டில் சினிமாவைப் போலவே பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ரஜினி- கமல்.... வைரலாகும் புகைப்படங்கள்! இந்நிலையில் ஐசரி கணேஷ் மகளின் திருமணத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் மணிரத்னம், பிரபு, ரவி மோகன், அதிதி சங்கர், சத்யராஜ், போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா, கௌதம் மேனன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ரஜினி- கமல்.... வைரலாகும் புகைப்படங்கள்!இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல்ஹாசன் ஆகியோரும் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிப்டுகளை வழங்கி மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ