Homeசெய்திகள்சினிமா'ரெட்ரோ' படத்தை பார்த்த ரஜினி.... என்ன சொன்னார் தெரியுமா?

‘ரெட்ரோ’ படத்தை பார்த்த ரஜினி…. என்ன சொன்னார் தெரியுமா?

-

- Advertisement -

கடந்த மே 1 அன்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் ரெட்ரோ. சூர்யாவின் 44 வது படமாக உருவாகியிருந்த இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார். 'ரெட்ரோ' படத்தை பார்த்த ரஜினி.... என்ன சொன்னார் தெரியுமா?இதில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், பிரகாஷ்ராஜ், விது மற்றும் பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்க கார்த்திக் சுப்பராஜும், சூர்யாவும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் சூர்யா ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் சூர்யா, பூஜா ஹெக்டேவின் நடிப்பு பாராட்டப்படுகிறது. சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. ‘கனிமா’ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், ரெட்ரோ படம் பார்த்துவிட்டு ரஜினி பாராட்டியதாக பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “முழு படக்குழுவின் முயற்சியும் அருமை. சூர்யாவின் நடிப்பு சூப்பர். அதிலும் கடைசி 40 நிமிடங்கள் பிரமாதம். அந்த சிரிப்பு காட்சி அருமை. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்று ரஜினி ரெட்ரோ படத்தை பாராட்டியதாக குறிப்பிட்டு, “நான் இப்போது பார்க்கிறேன். லவ் யூ தலைவா” என்று பதிவிட்டுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், ரஜினியின் தீவிர ரசிகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ், ரஜினி நடிப்பில் பேட்ட திரைப்படத்தை இயக்கியிருந்த நிலையில் வரும் காலத்தில் மீண்டும் இந்த கூட்டணி இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

MUST READ