spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகுடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய ரஜினி... வைரலாகும் புகைப்படங்கள்!

குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய ரஜினி… வைரலாகும் புகைப்படங்கள்!

-

- Advertisement -

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி... வைரலாகும் புகைப்படங்கள்!தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி, தனுஷ், லோகேஷ் கனகராஜ், வைரமுத்து என பலரும் தங்களின் வாழ்த்துக்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க ரஜினியின் ரசிகர்களும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி... வைரலாகும் புகைப்படங்கள்! ரஜினிக்கு வயதானாலும் ஸ்டைலும் எனர்ஜியும் என்றும் குறையாமல் இருப்பது போல் 1970 காலகட்டங்களில் இருந்த ரசிகர்களும் இன்றளவும் குறையாமல் இருக்கின்றனர். மேலும் பல இளம் நடிகர்கள் இன்று சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தாலும் அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஃபுல் எனர்ஜியுடன் நடித்து அசத்துகிறார் ரஜினி. இத்தகைய புகழுடைய ரஜினிக்கு ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்தது மட்டுமல்லாமல் தங்களின் தலைவனாகவும் கொண்டாடி வருகின்றனர். ஆரம்பத்தில் கண்டக்டராக வேலை செய்து விசில் அடித்த ரஜினிக்கு இன்று கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரின் பெயரைச் சொல்லி விசில் அடிக்கிறார்கள்.குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி... வைரலாகும் புகைப்படங்கள்!இந்நிலையில் ரஜினி தனது குடும்பத்தாருடன் பிறந்த நாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார். இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

MUST READ