spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாராமோஜி ராவ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த ரஜினி!

ராமோஜி ராவ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த ரஜினி!

-

- Advertisement -
kadalkanni

நடிகர் ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ராமோஜி ராவ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த ரஜினி!இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. படமானது 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. எனவே வேட்டையன் படத்தை முடித்த நடிகர் ரஜினி சிறிது நாட்கள் பிரேக் எடுத்துக் கொண்டார். அதன்படி ஓய்வு நேரத்தை செலவிட அபுதாபி சென்ற ரஜினி பின்னர் இமயமலைக்கும் பயணம் சென்றார். சமீபத்தில் இமயமலையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள கூலி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கான முழு வேலைகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினி தனது சமூக வலைதள பக்கத்தில், பிரபல தயாரிப்பாளரும் தொழிலதிபருமான ராமோஜி ராவ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். ராமோஜி ராவ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த ரஜினி!அந்த பதிவில், “எனது வழிகாட்டியும் நலம் விரும்பியாகவும் இருந்த ஸ்ரீ ராமோஜி ராவ் அவர்களின் மறைவை கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். அரசியல், சினிமா, பத்திரிக்கை என அனைத்திலும் சிறந்து விளங்கி ஒரு கிங் மேக்கராக வரலாறு படைத்தவர். அவர் எனது வாழ்க்கையில் வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் இருந்தவர். அவரது ஆன்மா சாந்தி அடைய நான் இறைவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ