நடிகர் ரஜினி தற்போது தனது 170வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஜெய் பீம் படம் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படம் 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் ரஜினி வேட்டையன் திரைப்படத்தில் தனது பகுதிகளை நிறைவு செய்துள்ளார். அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.
ரஜினியின் 171 வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலகிலேயே மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான
முகேஷ் அம்பானியின் இல்லத் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார். அதாவது சமீபத்தில் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்ட் ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் தற்போது மும்பையில் மிகப்பிரமாண்டமாக கிட்டத்தட்ட 1700 கோடி செலவில் திருமண விழா நடைபெற்று வருகிறது.
Superstar #Rajinikanth Dance at Ambani Family wedding function 🤩🕺pic.twitter.com/KyJinCZ34q
— AmuthaBharathi (@CinemaWithAB) July 12, 2024
இந்த விழாவில் பல மொழிகளைச் சேர்ந்த திரை பிரபலங்களும், தோனி உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்தும் இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள நிலையில் தன்னை மறந்து விழாவில் நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.