இந்தியாவில் மிகப்பெரிய பிரம்மாண்ட தியேட்டர் உருவாக்கியதற்காக ரஜினிகாந்த், முகேஷ் அம்பானிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தற்போது மும்பையில் பிராட்வே என்ற பெயரில் பிரம்மாண்டமான தியேட்டர் அரங்கம் ஒன்றை நிறுவியுள்ளார். அதில் 2000 பேர் உட்காரும் வகையில் இருக்கைகள் கொண்டுள்ளன. மேலும் 8000 LED விளக்குகள் கொண்டு கண்கவரும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த தியேட்டர் அமைத்ததற்காக ரஜினிகாந்த் முகேஷ் மற்றும் நீதா அம்பானிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
“இந்தியாவின் முதல் ஆடம்பரமான உலகத் தரம் வாய்ந்த பிராட்வே தியேட்டர் மும்பையில் பிரமாண்டமாக வருகிறது! இதை சாத்தியமாக்கிய என் அருமை நண்பர் முகேஷ் அம்பானிக்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துகள்!
#NMACC pic.twitter.com/qhmexdOWcz
— Rajinikanth (@rajinikanth) April 1, 2023
நீதா அம்பானி ஜி, இதுபோன்ற அற்புதமான, தேசபக்தி, மனதைக் கவரும் மற்றும் மயக்கும் நிகழ்ச்சிக்காக உங்களையும் உங்கள் குழுவையும் வாழ்த்துவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. மாபெரும் இந்திய இசை – நாகரீகம் இப்போது தேசத்திற்கு இந்த அற்புதமான திரையரங்கில் ஒரு நாடகம் நடத்த வேண்டும் என்ற கனவு ஒன்று எனக்கு உள்ளது .. அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன் !!


