கூலி படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஜினியின் 171வது படமான கூலி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், சௌபின் சாகிர், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகர் நாகார்ஜுனா ஸ்டைலிஷான வில்லனாக மிரட்டி இருந்தார். நடிகை ஸ்ருதிஹாசன் தனது உணர்வுபூர்வமான நடிப்பினால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். யூகிக்க முடியாத கேரக்டரில் சௌபின் சாகிர் கலக்கியிருந்தார். இது தவிர நடிகர் ரஜினி வழக்கம்போல் மாஸ், ஸ்டைல் என பட்டைய கிளப்பி இருந்தார். இவ்வாறு இந்த படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வந்தாலும் இந்த படம் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேசமயம் இப்படம் வசூலிலும் அடித்து நொறுக்குகிறது. அந்த வகையில் இந்த படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.170 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியானது. மேலும் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் இரண்டாம் நாளிலும் இப்படத்தின் வசூல் அதிகரித்துள்ளது. அதன்படி முதல் இரண்டு நாட்களில் இப்படம் ரூ.250 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.