கூலி படத்தின் ட்விட்டர் விமர்சனம்
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் வெளியாகும் திரைப்படம் தான் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தைக் காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அதன்படி இப்படம் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் அதிகாலையிலேயே திரையிடப்பட்டுள்ளது. ரசிகர்களும் இப்படம் குறித்து தங்களின் கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
#Coolie First Half 👏🏻
– Ok & Decent First’ Half 👀
– #Soubin & #Nagarjuna‘s acting was great.
– #Anirudh Music PEAK
– #Rajinikanth: Mudichidlam Ma….!
– #PoojaHegde “Monica Song” Placement Super 💯
– Interval Decent pic.twitter.com/kmKBVDlFKG— Movie Tamil (@MovieTamil4) August 14, 2025

அதன்படி ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முதல் பாதி ஓகே. சௌபின் சாகிர் மற்றும் நாகார்ஜுனாவின் நடிப்பு சிறப்பு. அனிருத்தின் இசை மிரட்டுகிறது. மோனிகா பாடல் மற்றும் இடைவேளை சூப்பர்” என்று பதிவிட்டுள்ளார்.
#Coolie First Half Review 🍿
– An Engaging First Half So far..✌️
– Superstar #Rajinikanth shoulders the film in his Shoulders with his Presence..🙏❣️
– Film doesn’t have many dull moments & keeps you engaging till interval..
– Song placements were a drawback & Expected a Banger…— Laxmi Kanth (@iammoviebuff007) August 14, 2025
மற்றுமொரு ரசிகர், “முதல் பாதியில் ஒரு சுவாரசியமான காட்சி இருக்கிறது. வழக்கம்போல் ரஜினி, படத்தை தனது தோள்களில் சுமந்து செல்கிறார். படத்தில் அதிக சலிப்பான காட்சிகள் இல்லை. இடைவேளை வரை சுவாரசியமாக நகர்கிறது. பேங்கர் இடைவேளை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாம் பாதி எப்படி முடியும் என்று பார்ப்போம்” என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
First Half – OK
Energetic Superstar, Stylish Nagarjuna, Performer Shruthi. Anirudh Maja. 4 songs. Scenes r Kinda Disconnected. Interval Block & Vintage Song Pakka!#Coolie
— Christopher Kanagaraj (@Chrissuccess) August 14, 2025
இது தவிர மற்றுமொரு ரசிகர், ” ரஜினி எனர்ஜியாகவும், நாகார்ஜுனா ஸ்டைலிஷாகவும் நடித்திருக்கிறார்கள். ஸ்ருதிஹாசன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அனிருத்தின் இசை மஜாவாக இருக்கிறது. காட்சிகள் துண்டிக்கப்பட்டன. மேலும் இடைவேளை மற்றும் விண்டேஜ் பாடல்கள் பக்காவாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.