spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅந்த காலம் போல் இந்த காலமும் மாறிவிடாதா...... நாங்குநேரி சம்பவத்திற்கு ராஜ்கிரண் கண்டனம்!

அந்த காலம் போல் இந்த காலமும் மாறிவிடாதா…… நாங்குநேரி சம்பவத்திற்கு ராஜ்கிரண் கண்டனம்!

-

- Advertisement -

நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவனை சக மாணவர்கள் அரிவாளால் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாதி வெறியால் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவன் சின்னதுரைக்கு உடன் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதன் காரணமாக 10 நாட்கள் பள்ளிக்கு செல்லாத காரணத்தால் ஆசிரியர் செல்போனில் தொடர்பு கொண்டு சின்னதுரையிடம் பேசி இருக்கிறார். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து சின்னதுரை சொல்ல ஆசிரியரும் சாதி வெறியில் தொல்லை கொடுக்கும் மாணவர்களை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த மாணவர்கள் உதவிக்கு சிறார்களை அழைத்துக்கொண்டு சின்னதுரையின் வீட்டில் புகுந்து அவரையும் அவர் தங்கையை அரிவாளால் தாக்கியுள்ளனர். இதை கண்ட சின்னதுரையின் தாத்தா சம்பவ இடத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சின்னதுரையையும் அவரது தங்கையையும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது இருவருக்கும் சிகிச்சை நடைபெற்று வருகிறது.

we-r-hiring

இந்த கொடூர சம்பவம் குறித்து திரை உலக பிரபலங்கள் பல தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ராஜ்கிரண்,தனது சமூக வலைதள பக்கத்தில்,”நான் பள்ளியில் படித்த காலங்களில் யாரும் எவ்வித பேதமும் பார்த்ததில்லை. இன்று மாணவர்கள் மற்றும் சமூக சூழ்நிலை நினைத்து மனம் பதறுகிறது இப்படியான சூழல் எப்படி உருவானது? அந்த காலம் போல் இந்த காலமும் மாறி விடாத இறைவா என்று, ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ