Homeசெய்திகள்சினிமாஇதை தான் விஜய் என்னிடம் சொன்னார்..... ராஜ்குமார் பெரியசாமி பேட்டி!

இதை தான் விஜய் என்னிடம் சொன்னார்….. ராஜ்குமார் பெரியசாமி பேட்டி!

-

- Advertisement -

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று அமரன் எனும் திரைப்படம் வெளியானது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்த இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். இதை தான் விஜய் என்னிடம் சொன்னார்..... ராஜ்குமார் பெரியசாமி பேட்டி!இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்திருந்தார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இன்று வரையிலும் இந்த படம் பேசப்பட்டு வருகிறது. அதன்படி அமரன் திரைப்படத்தையும் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமியையும், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியையும் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் தளபதி விஜய், ராஜ்குமார் பெரியசாமியை நேரில் சந்தித்து பாராட்டினார். இந்நிலையில் இது குறித்து ராஜ்குமார் பெரியசாமி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இதை தான் விஜய் என்னிடம் சொன்னார்..... ராஜ்குமார் பெரியசாமி பேட்டி!அதில், “அமரன் படத்தை சீக்கிரமே ரிலீஸ் செய்திருந்தால் நாம் இணைந்து பணியாற்றி இருக்கலாம் என்று விஜய் தன்னிடம் சொன்னதாக கூறியுள்ளார். மேலும் அமரன் படம் குறித்து விஜய், அதான் உலகமே பாராட்டுதே நான் சொல்லவா வேணும். உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது என்று மிகவும் சிம்பிளாக சொன்னார்” என்று விஜய் குறித்து பேசி உள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.

MUST READ